இந்தியாவின் 3வது நிலவுப் பயணம் ஜூலையில் தொடங்கப்படும்: இஸ்ரோ தலைவர்
2023-05-30 10:45:35

இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பயணத்துக்காக சந்திரயான்-3, இவ்வாண்டு ஜூலை மாதம் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார். 

தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இரண்டாம் தலைமுறை வழிசெலுத்தல் செயற்கைக்கோள் NSV-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், சோமநாத் இவ்வாறு தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் நாள் அன்று சந்திரயான் 2 ஏவப்பட்டது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் திட்டப்படி நிலவில் மென்மையாக தரையிறங்குவதற்கு முன்பு  தொடர்பை இழந்தது.

பின்னர், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) , சந்திரனைச் சுற்றி வரும் அதன் செயற்கைக்கோள், இந்தியாவின் விபத்துக்குள்ளான சந்திரயான் 2 இன் சிதைவைக் கண்டுபிடித்ததாகக் கூறியது.