ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் சீனா பங்கெடுத்தல்
2023-05-30 15:23:19

சீன அரசவை உறுப்பினரும் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லீசாங்ஃபு மே 31ஆம் நாள் முதல் ஜூன் 4ஆம் நாள் வரை, 20ஆவது ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க உள்ளார். அதேவேளையில், சிங்கபூரில் பயணம் மேற்கொள்வார் என்று சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டான்க்ஃபி மே 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.  

தவிரவும், மே 16ஆம் நாள் பிற்பகல், சீன-ஜப்பான் தேசிய பாதுகாப்பு அமைச்சகங்களுக்கான கடல் ஆகாய தொடர்பு அமைப்புமுறையின் நேரடி தொலைபேசியின்  மூலம், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சருடன் லீசாங்ஃபு பேசியதாக அவர் தெரிவித்தார்.

சீனாவுடன் சேர்ந்து ஜப்பான் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சி மற்றும் பிரதேசத்தின் அமைதிக்கும் நிதானத்திற்கும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்று சீனா விரும்புவதாக டான்க்ஃபி குறிப்பிட்டார்.