அமெரிக்க கடன் உச்சவரம்பு உடன்படிக்கை குறித்து பிரதிநிதிகள் அவையில் வாக்குப்பதிவு
2023-05-31 18:59:31

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இடையே எட்டப்பட்ட இறுதி உடன்படிக்கையை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையைச் சேர்ந்த விதிமுறைக் குழு 30ஆம் நாள் பரிசீலனை செய்தது. இது தொடர்பான வாக்கெடுப்பில், 7 வாக்குகள் ஆதரவாகவும் 6 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலைமையில், இவ்வுடன்படிக்கையை பிரதிநிதிகள் அவையிடம் சமர்ப்பித்து, அனைத்து உறுப்பினர்களுக்குமிடையே வாக்குப்பதிவு நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.