© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜுன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சினிபிங்கின் மனைவி ஃபாங் லியுவான் அம்மையார், ஆப்பிரிக்க முதல் பெண்மணிகள் வளர்ச்சி சம்மேளனத்துடன் சேர்ந்து ஆப்பிரிக்க அனாதைக் குழந்தைகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்தார். இந்நடவடிக்கையில் ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் சீனாவின் மருத்துவ அணிகளும் உள்ளூர் ஆதரவற்றக் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சென்று, குழந்தைகளுக்கு இலவச உடல் பரிசோதனை வழங்கி அன்பளிப்புகளை வழங்குகின்றன.
பல ஆப்பிரிக்க நாடுகளில் அந்த நாட்டின் அரசுத் தலைவர்களும் அவர்களது மனைவிகளும் உயர் அதிகாரிகளும் தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்து கொண்டு சீன-ஆப்பிரிக்க நட்புறவை வெகுவாகப் பாராட்டினர்.