இவ்வாண்டில் உக்ரைனின் தானிய ஏற்றுமதி 40விழுக்காடு சரிவு
2023-06-01 17:24:56

இவ்வாண்டில் உக்ரைன் தானியம் மற்றும் எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி 4.6கோடி டன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டில் இருந்ததை விட, மூன்றில் ஒரு பங்கு குறையும் என்றும், தானியங்களின் ஏற்றுமதி சுமார் 40விழுக்காடு குறையும் என்றும் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வேளாண்மைக் கொள்கை மற்றும் தானியத் துறை அமைச்சர் சோல்ஸ்கி தெரிவித்தார்.