இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 6.1 விழுக்காடாக அதிகரிப்பு
2023-06-01 11:05:50

இவ்வாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.1 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் முன்னணி பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது.

கடந்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி 7.2 விழுக்காடாக பதிவாகியிருந்தது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகளான 7 விழுக்காட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.