கடன் உச்சவரம்பு குறித்த அமெரிக்காவின் சட்ட முன்மொழிவு
2023-06-01 15:02:42

வாக்கெடுப்பின் மூலம் அமெரிக்க கூட்டாட்சி அரசின் கடன் உச்சவரம்பு மற்றும் வரவு செலவு குறித்த சட்ட முன்மொழிவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை மே 31ஆம் நாளிரவு நிறைவேற்றியுள்ளது. அதன்படி கடன் உச்சவரம்புக்கான விண்ணப்பம் 2025ஆம் ஆண்டின் துவக்கம் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2024 - 2025 நிதியாண்டுக்கான வரவு செலவு கட்டுப்படுத்தப்படும். இச்சட்ட முன்மொழிவு, பிரதிநிதிகள் அவையால் நிறைவேற்றப்பட பின்னர் அரசுத் தலைவர் பைடனிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும். பைடன் கையொப்பமிட்ட பிறகு, இச்சட்ட முன்மொழிவு நடைமுறைக்கு வரும்.