நேபாள தலைமை அமைச்சர் அதிகாரப்பூர்வ பயணமாக டெல்லி வந்தடைந்தார்
2023-06-01 11:06:31

இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நேபாள தலைமை அமைச்சர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவுடன், நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக புதன்கிழமை டெல்லி வந்தடைந்தார்.

இரு நாடுகளின் தலைமை அமைச்சர்கள் முன்னிலையில், இரு தரப்பும் சில இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைத் தவிர, மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் நகரங்களுக்கும் பிரசந்தா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.