அமெரிக்காவும் சீனாவும் சண்டையிடும் ஒட்டிப் பிறந்த சகோதரர்
2023-06-01 14:55:29

சீன வெளியுறவு அமைச்சர் சின்காங், மே 30ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில்,  அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்கினைச் சந்தித்துரையாடினார்.

அமெரிக்கா சீனாவிருந்து விலகிச் சென்று, வினியோகச் சங்கிலியைத் துண்டிப்பது என்பதைத் தெளிவாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட மஸ்க், அமெரிக்க-சீன நலன்கள் பின்னிப்பிணைக்கப்பட்டு, ஒட்டிப்பிறந்த இரண்டு சகோதரர்களைப் போல், இணைபிரியாதவை என்று தெரிவித்தார்.

இருநாட்டுறவு சிக்கலுக்குள்ளாகிய தற்போதைய சூழ்நிலையில் மஸ்கின் இக்கருத்துக்கள், அமெரிக்காவின் தொழில் நிறுவனத் துறையினர்களின் உண்மையான குரல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்க அரசு இத்தகைய கருத்துகளை உணர்வுபூர்வமாக கேட்டறிய வேண்டும்.

இலாபம் இருக்கும் இடத்தில் முதலீடு செய்தல் என்பது பொருளாதார விதியாகும். சீனாவின் அதிகாரப்பூர்வமான முன் மதிப்பீட்டின்படி, கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் நேரடியான வெளிநாட்டு முதலீட்டிற்கான இலாபம் 9.1 விழுக்காடாகும். மேலும், சீனச் சந்தை மீது அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பேரார்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், சீனா மீது அமெரிக்கா நிர்ப்பந்தத்தைத் திணிப்பது, சொந்த நாட்டின் நிறுவனத்தின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும். இதன் விளைவாக ஏற்படும் அரசியலுக்குப் பலியாகாமல் அமெரிக்க நிறுவனங்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டியுள்ளன.