பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது
2023-06-02 10:57:54

தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகர் கேப் டவுனில் வியாழன் அன்று பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது.

தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகையில், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் மாற்றுவதன் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்துவோம் என்றும், நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய பொருளாதார மீட்சிக்கான தீர்வுகளை எதிர்நோக்குவோம் என்றும் கூறினார்.   

இவ்வாண்டின் பிரிக்ஸ் உச்சிமாநாடு, "பிரிக்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா" என்ற கருப்பொருளுடன், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் என்று பாண்டோர் கூறினார்.