பூமிக்குத் திரும்ப உள்ள ஷென்சோ-15 வீரர்கள்
2023-06-02 20:03:22

சீனாவின் ஷென்சோ-15 விண்வெளிப் பயணக் குழுவின் மூன்று வீரர்கள் ஜுன் 2ஆம் நாள் விண்வெளி நிலையத்தின் கட்டுப்பாட்டை ஷென்சோ-16 குழுவிடம் ஒப்படைத்தனர். திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் நிறைவேற்றிய அவர்கள் ஜுன் 4ஆம் நாள் ஷென்சோ-15 விண்கலம் மூலம் டொங்ஃபேங் தரையிறங்கு தளத்துக்குத் திரும்ப உள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளி பணியகம் தகவல் வெளியிட்டது.