அமைதி நோக்கத்துடன் ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் சீனா
2023-06-02 15:36:21

கடந்த சில நாட்களில், 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிங்கப்பூரைச் சென்றடைந்து, ஜூன் 2ஆம் நாள் துவங்கிய ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லீ சாங்ஃபூ, ஜூன் முதல் நாள் முற்பகல், சிங்கப்பூர் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் அன் ஹென்னுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது, சீன-ஆசியான் உறவு பற்றி குறிப்பிட்ட லீசாங்ஃபு, ஆசிய-பசிபிக் பிரதேசம், எங்களுக்கு பொதுத் தாயகமாகும் எனத் தெரிவித்தார். மேலும், செழுமை மற்றும் நிதானம் என்பது பல்வேறு நாட்டு மக்களின் பொது விருப்பமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அமைதி நோக்கத்துடன், சீனா, ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக என்றார்.