தைவானுடனான அமெரிக்க வர்த்தக முன்மொழிவுக்கு சீனா எதிர்ப்பு
2023-06-02 17:19:56

அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையே 21ஆம் நூற்றாண்டு வர்த்தக முன்மொழிவின் முதல்கட்ட உடன்படிக்கை உருவாக்கம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நீங் 2ஆம் நாள் கூறுகையில், இந்த கூறப்படும் முன்மொழிவு, ஒரே சீனா என்ற கொட்பாட்டை அமெரிக்கா மீறியுள்ளதற்கு புதிய சான்று ஆகும் என்று தெரிவித்தார். மேலும், இது குறித்து கடும் மனநிறைவின்மையைத் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்க தரப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரே சீனா என்ற கொள்கையையும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மூன்று கூட்டறிக்கைகளையும் அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்றும், தைவானுடன் எந்த வடிவிலான அதிகாரப்பூர்வத் தொடர்பையும் நிறுத்தி, கூறப்படும் முன்மொழிவு மற்றும் அதன் உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுப்பதாக மெள நீங் தெரிவித்தார்.