அமெரிக்காவின் கடன் பிரச்சினை
2023-06-02 14:17:44

வாக்களிப்பு மூலம் கடன் உச்சவரம்பு சட்ட முன்மொழிவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை நிறைவேற்றியது. இது பற்றி கூறுகையில், தற்காலிகச் சமாதானம் மட்டுமே, முடிவுக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் கருத்து தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் அரசு கடன், உலகளாவிய கடன் பத்திர சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இப்பிரச்சினையைச் சரிசெய்யத் தவறினால், அது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் பேரழிவு தரும். தற்போது, அமெரிக்கா வழங்கிய தீர்வு திட்டம், முரண்பாட்டைப் பின்னுக்குத் தள்ளுவதைத் தவிர வேறில்லை. அமெரிக்க கடனின் அளவு 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்பு இல்லாத அளவை எட்டும். அப்போது அமெரிக்கப் பொருளாதாரம் சந்திக்கும் பிரச்சினைகள் மேலும் அதிகமாக இருக்கும்.

அதேவேளையில், அமெரிக்காவின் அரசியல் துருவமயமாக்கமும் உலகச் சந்தையின் கவலைகளைத் தீவிரமாக்கியுள்ளது.