பிலிப்பைன்சில் நடைமுறைக்கு வந்த ஆர்சிஇபி உடன்படிக்கை
2023-06-02 10:51:41

பிலிப்பைன்சில் ஜூன் 2 ஆம் நாள் பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவு உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்படிக்கையின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் இது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளதை இது குறிக்கிறது. அதனையடுத்து உலகின் மிகப் பெரிய தாராள வர்த்தகச் சோதனை மண்டலம், பன்முக நடைமுறையின் புதிய கட்டத்திற்குள் நுழையும்.

பிராந்தியப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளியுறவு  நடைமுறைக்கு வருவது வர்த்தகம் மற்றும் முதலீட்டில் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழிற்துறையின் அமைச்சர் ஆல்ஃபிரடோ பாஸ்குவேல் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளரிடம் கூறினார். மேலும், சீனாவின் முதலீடு, பிலிப்பைன்சுக்கு மேலதிக வளர்ச்சியைக் கொண்டு வரும் எனக் குறிப்பிட்ட அவர்,  இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.