மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இந்திய மாநில முதலமைச்சர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்
2023-06-02 10:58:32

இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதைக் கண்டித்து, போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக, இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் வியாழன் அன்று ஊர்வலத்தில்  கலந்துகொண்டு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரைக் கைது செய்யக் கோரியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தி, மல்யுத்த வீரர்களின் இப்போராட்டத்தை "வாழ்க்கை, நீதி மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டம்" என்று வர்ணித்தார்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின், சட்டமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.