ரஷியா, உக்ரைன் முதலிய நாடுகளின் பயணம் குறித்து சீனப் பிரதிநிதி அறிமுகப்படுத்துதல்
2023-06-02 18:49:40

உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வு குறித்து உக்ரைன், போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் மற்றும் ரஷியாவில் மேற்கொண்ட பயணம் பற்றி யூரேசிய விவகாரத்துக்கான சீன அரசின் சிறப்புப் பிரதிநிதி லீஹுய் ஜூன் 2ஆம் நாள் சீனாவுக்கான பன்னாடுகளின் தூதர்களுக்கு அறிமுகப்படுத்தினார். 

அமைதி மற்றும் பேச்சுவார்த்தையின் வழியில் உக்ரைன் நெருக்கடியின் தீர்வுக்கான சீனாவின் பங்களிப்பைப் பயணத்தின் போது பல்வேறு தரப்புகள் பாராட்டு தெரிவித்தன. தற்போதைய உக்ரைன் நெருக்கடியின் நிலைமை இன்னும் உறுதியற்றதாக நிலவுகிறது. நிலைமையைத் தணிவுப்படுத்திப் பேச்சுவார்த்தையை முன்னேற்ற உதவும் வகையில் செயல்பட சீனா விரும்புகிறது என்று லீஹுய் கூறினார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கருத்துக்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திப் பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வுக்குச் சீனாவின் ஞானம் மற்றும் சக்தியைத் தர சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.