வெளிநாடுகளில் 14700 கோடி டாலருக்கும் அதிகமாக முடங்கியுள்ள ரஷியாவின் ரூபாய் சொத்து
2023-06-02 11:29:12

புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியின்படி, இந்தியாவுடனான சமநிலையற்ற வர்த்தகம் காரணமாக, திங்களுக்கு 100 கோடி டாலர் மதிப்புள்ள ரஷியாவின் ரூபாய் சொத்து வெளிநாடுகளில் தேக்கம் அடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டின் இறுதி வரை இதன் மொத்த மதிப்பு 14700 கோடி டாலரைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில், ரஷியா இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் விநியோக நாடாக மாறியுள்ளது. இருதரப்புகளும் இந்திய ரூபாய் மூலம் பரிவர்த்தனை செய்து வருகின்றன. இதனிடையில், இந்தியாவுடனான இறக்குமதித் துறை நீண்டகாலமாகத் தேக்க நிலையில் இருந்து வருதல் மற்றும் இந்தியாவின் நாணயக் கொள்கை. ஆகியவற்றின் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து ரூபாய் பணத்தை ரஷியாவுக்கு அனுப்புவது என்பது மிகக் கடினமாக மாறி வருகின்றது.