20 ஆவது ஷாங்கரிலா உரையாடல் துவக்கம்
2023-06-03 16:43:26

3 நாட்கள் நீடிக்கும் 20 ஆவது ஷாங்கரிலா உரையாடல் ஜுன் 2ஆம் நாள் சிங்கப்பூரில் தொடங்கியது. இதில், 40க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு துறைகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள் பங்கெடுத்தனர்.

இவ்வுரையாடலின்போது, 7 முழு அமர்வுகள், 2 அமைச்சர் நிலை வட்ட மேசைக் கூட்டங்கள், 6 சிறப்புக் கருத்தரங்குகள் ஆகியவை நடத்தப்படும். பாதுகாப்புத் துறையில் இணையம் மற்றும் தொழில் நுட்பப் போட்டியினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஆசிய-பசிபிக் இராணுவ ஆற்றல் வளர்ச்சிக்கான சவால்கள், ஆணு ஆற்றல் பார்வையிலுள்ள பிரதேசப் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் பற்றிய 3 சிறப்புக் கருத்தரங்குகள் ஜூன் 2ஆம் நாள் நடைபெற்றன.