ஒடிசா மாநிலத்தில் தொடர்வண்டி விபத்துக்கு சீன வெளியுறவு அமைச்சர் ஆறுதல்
2023-06-03 21:48:29

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த தொடர்வண்டி விபத்து குறித்து சீன வெளியுறவு அமைச்சர் சின்காங் ஜுன் 3ஆம் நாள் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ஆறுதல் செய்தியை அனுப்பினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.