ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய ஒத்துழைப்பு வரைவில் சீனாவும் அர்ஜெண்டினாவும் கையெழுத்து
2023-06-03 17:22:46

சீன மக்கள் குடியரசு மற்றும் அர்ஜெண்டினா குடியரசு இடையே ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னெடுப்பது பற்றிய ஒத்துழைப்பை வரைவில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் ஜுன் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் கையெழுத்திட்டனர்.

அதன்படி,  உள்கட்டமைப்பு வசதி, எரியாற்றல், பொருளாதார வர்த்தகம், நிதி, மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனாவும் அர்ஜெண்டினாவும்  செயல்படும். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்த உதவும் இந்த ஒத்துழைப்பு வரைவு, இரு தரப்பு தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக ஒத்துழைப்பு வாய்ப்பை கொண்டு வந்து, இரு நாட்டு மக்களை பயனயடைய செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.