காங்கோ ஜனநாயக குடியரசுத் தலைவர்: சீனாவின் வளர்ச்சி வியக்கத் தக்கது
2023-06-03 19:23:29

காங்கோ ஜனநாயக குடியரசுத் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். அரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். இப்பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் இணைந்து, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி கொண்ட நெடுநோக்கு கூட்டாளி உறவைப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவாக மேம்படுத்துவதாக ஷிசேகெடி அறிவித்தார். 

இது தொடர்பாக சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறுகையில், சீனா மிகவும் அழகான நாடாகும் எனக் குறிப்பிட்டார். மேலும்,  நான் சென்றடைந்த ஒவ்வொரு நகரமும்  மிகவும் அழகானது மிகவும் நவீனமயமானது. சீனா நவீனமயமாக்கலை வெற்றிகரமாக நனவாக்குவதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், சீனா பெற்றுள்ள பெரும் வளர்ச்சி வியக்கத் தக்கது என்றும் நமது நாட்டில் இத்தகைய வளர்ச்சி வழிமுறையை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.