இந்தியாவிலுள்ள நடந்த கடுமையான தொடர்வண்டி விபத்தில் 288 பேர் பலி
2023-06-03 16:49:55

உள்ளூர் தீ அணைப்பு துறை வெளியிட்ட தரவுகளின் படி, 2ஆம் நாள் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் 3 தொடர்வண்டிகள் அடுத்தடுத்து மோதி,  17 தொடர்வண்டி பெட்டிகள் தடம் புரண்டதாக இந்தியத் தேசிய பேரிடர் மீட்புதவி படையின் பொறுப்பாளர் ஒருவர் 3ஆம் நாள் தெரிவித்தார்.

இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, 3ஆம் நாள், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக இந்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.