தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்
2023-06-03 18:34:26

ஒடிசா மாநிலத்தில் நடந்த தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தும் வகையில், இந்திய அரசு உயர் நிலை குழுவை உருவாக்கியுள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.