கடன் உச்ச வரம்பு மசோதாவில் பைடன் கையொப்பம்
2023-06-04 17:14:04

அமெரிக்க அரசு கடன் பொறுப்பினை நிறைவேற்றாமல் தவிர்க்கும் வகையில், அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜோ பைடன் உள்ளூர் நேரப்படி ஜுன் 3ஆம் நாள் கடன் உச்ச வரம்பு பற்றிய மசோதாவில் கையொப்பமிட்டு, அதனை நடைமுறைப்படுத்தினார்.

அதன்படி, அரசின் கடன் உச்ச வரம்பு 2025ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, 2024 மற்றும் 2025 நிதியாண்டின் செலவும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.