வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஷென்சோ-15 விண்வெளிப் பயணத் திட்டம்
2023-06-04 17:10:46

 

சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, பெய்ஜிங் நேரப்படி 2023ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் நாள் காலை 6:33 மணிக்கு, ஷென்சோ-15 விண்கலத்தின் திரும்பு கலம் டோங்ஃபேங் தரையிறங்கு தளத்தை வெற்றிகரமாக அடைந்தது. விண்வெளி வீரர்களான ஃபெய் ஜுன்லோங், டேங் சிங்மிங், ச்சாங் லு ஆகியோர் கலத்திலிருந்து தடையின்றி பாதுகாப்பாக வெளியேறினர். அதனையடுத்து ஷென்சோ-15 விண்வெளிப் பயணத் திட்டம் வெற்றியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர், விண்வெளி வீரர்கள் விமானம் மூலம் பெய்ஜிங்கினை வந்தடைந்தனர். அவர்களைச் சீன விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி கட்டப் பயணக் கடமைக்குப் பொறுப்பான  தலைமை ஆணையகத்தின் தலைவர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அடுத்ததாக, மருத்துவத் தடைக்காப்பு காலத்தில் நுழையும் இம்மூன்று வீரர்களுக்கு மருத்துவச் சோதனை மற்றும் உடல்நிலை மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. ஓய்வுக்குப் பிறகு பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.