பாலஸ்தீனத்திற்கான சீனாவின் நிதியுதவி
2023-06-04 17:39:52

அண்மை கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான உதவி மற்றும் பணி நிறுவனத்தின் நன்கொடைக்கான வாக்குறுதி கூட்டம் ஜுன் 2ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்வாண்டு இந்நிறுவனத்திற்கு 10 இலட்சம் டாலரைச் சீனா நன்கொடையாக வழங்கும் என்று ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி கெங் சுவான் இக்கூட்டத்தில்  தெரிவித்தது.

 மேலும் சட்டப்படியான தேசிய உரிமையைப் பாலஸ்தீன மக்கள் பெறுவதற்குச் சீனா எப்போதுமே ஆதரவு அளிப்பதாகவும் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகவும், 1967ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை அடிப்படையாகவும் கொண்ட பாலஸ்தீனமை உருவாக்குவதற்கு சீனா ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.