ஷாங்கரி-லா உரையாடலில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் விவாதம்
2023-06-04 17:37:43

சிங்கப்பூரில் நடைபெற்ற 20ஆவது ஷாங்கரி-லா உரையாடலில், 40க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு துறைகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரதேசப் பாதுகாப்பு விவகாரம் குறித்து ஆழமாக விவாதம் நடத்தினர்.

இது தொடர்பான முழு அமர்வுகள் மற்றும் சிறப்புக் கருத்தரங்குகள் ஜுன் 3ஆம் நாள் நடத்தப்பட்டன. இதில், பல நாடுகளின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டு சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.