துருக்கி அரசுத் தலைவராக எர்டோகன் பதவியேற்பு
2023-06-04 17:05:53

துருக்கியின் அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் ஜுன் 3ஆம் நாள் தலைநகர் அங்காராவில் உறுதிமொழி கூறி பதவியேற்று, புதிய அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்தார். அதோடு, துருக்கி முன்பை விட மேலும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், தனது புதிய பதவிக்காலத்தில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுக்கவுள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் டிங் ச்சொங்லி எர்டோகனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்கு எர்டோகன் நன்றி தெரிவித்ததோடு, சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இருதரப்புறவை மேலும் உயர்நிலைக்கு முன்னேற்ற துருக்கி விரும்புவதாகவும் தெரிவித்தார்.