ஒடிசா தொடர்வண்டி விபத்து குறித்து சீன அரசுத் தலைவரின் ஆறுதல்
2023-06-04 16:53:13

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்திய தொடர்வண்டி விபத்து குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 3ஆம் நாள் இந்திய அரசுத் தலைவர் முர்மு மற்றும் இந்தியத் தலைமையமைச்சர் மோடி ஆகியோருக்குச் செய்தி அனுப்பி  ஆறுதல் தெரிவித்தார்.

தன்னுடைய செய்தியில், சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பாக, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலையும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக ஷி ச்சின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

அதே நாள் சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங், இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.