கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் சௌதி அரேபியா
2023-06-05 11:25:19

ஜூன் 4ம் நாள், சௌதி அரேபியா பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு கூட்டத்தின் முடிவுக்கு ஏற்பவும், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையைக் கூட்டாகப் பேணிக்காக்கும் வகையிலும், ஜூலை முதல் ஒரு மாத காலத்திற்கு, நாளொன்றுக்கு 10 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை இந்நாடு குறைக்கும். தேவை ஏற்படின் இக்கால வரம்பு நீட்டிக்கப்படவும் கூடும் எனத் தெரியவந்துள்ளது.