சீனாவில் ஒன்றிணைந்த சந்தை கட்டுமானத்துக்கான முன்னேற்றம்
2023-06-05 18:57:49

எதிர்காலத்தில், நாட்டின் ஒன்றிணைந்த சந்தை கட்டுமானத்தை வணிக அமைச்சகம் ஆக்கமுடன் முன்னேற்றி, அன்னிய முதலீட்டை மேலும் பெரிதும் ஈர்த்து பயன்படுத்தும் என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த சந்தை அமைப்புமுறை கட்டுமானப் பிரிவின் பொறுப்பாளர் சோவ் ச்சியாங் ஜுன் 5ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

அவர் மேலும் கூறுகையில், அன்னிய முதலீட்டுக்கான எதிர்மறை பட்டியலை சீரான முறையில் குறைத்து, அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாட்டை மேலும் நீக்கும் அல்லது தளர்த்தும். அதோடு, தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலம், ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுகம், தேசிய நிலை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலம் முதலிய திறப்பு மேடைகளின் வழிக்காட்டல் பங்குகளை வெளிக்கொணர்ந்து, அமைப்புமுறைக்கான திறப்பைச் சீராக முன்னேற்றுவோம் என்றார்.