பிரதேச நிதானம் மற்றும் வளர்ச்சி பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2023-06-05 18:38:14

அண்மையில் நடைபெற்ற ஷாங்கரி-லா உரையாடலின்போது, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் உயர்நிலை அதிகாரிகள் கூறுகையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு தரப்பைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், தனியொரு நாடு ஆசியாவில் “புதிய பனி போர்”தொடுக்க முயன்று வருகிறது. இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நெடுநோக்கு தற்சார்ப்பில் ஊன்றி நின்று, இப்பிரதேசத்தின் நிதானம் மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பது, இப்பிரதேச நாடுகளின் பொது விருப்பமாகும் என்றார்.