அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காகவே செயல்படும் சீனா
2023-06-05 18:52:11

20ஆவது ஷியாங்கரி-லா உரையாடல் சிங்கப்பூரில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனப் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர். ஷியாங்கரி-லா உரையாடல், மேலாதிகத்தை எழுப்பும் அரங்கிற்கு மாறாக, பாதுகாப்பு பற்றிய விவாதத்துக்கான மேடையாகும். சீனா நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் உலக அமைதியைப் பேணிக்காத்து, ஆக்கப்பூர்வ பங்குகளுடன் சர்வதேச சமூகத்துக்கு பொது பாதுகாப்புச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த உரையாடலில் சீனப் பிரதிநிதிக் குழுவின் பங்கெடுப்பு, அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காகவே அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டான் கேஃபெய் கூறுகையில், நடப்பு உரையாடலில், மங்கோலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்பட சர்வதேச அமைப்புகளின் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனும் பிரதிநிதிக் குழுத் தலைவர்களுடனும், இருதரப்புறவு, சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை, தைவான், தென் சீனக் கடல் போன்ற பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து சீனா கருத்துகளைப் பரிமாறிக் கொண்டது. சீனாவின் புதிய பாதுகாப்பு முன்மொழிவு பற்றி சீனாவின் நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கிக் கூறினர் என்று தெரிவித்தார்.