எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு உடன்படிக்கை
2023-06-05 14:26:21

உள்ளூர் நேரப்படி ஜூன் 3ஆம் முதல் 4ஆம் நாள் வரை, எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு சார்ந்த மற்றும் சாராத நாடுகள், வியன்னாவில் கூட்டம் ஒன்றை நடத்தின. இதில், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடினமான பேச்சுவார்த்தையை நடத்தி, எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் உடன்படிக்கையை எட்டியுள்ளன. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் துவக்கம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் வரையிலான காலத்தில் இரு தரப்புகளுக்கிடையிலான எண்ணெய் உற்பத்தி அளவு தினமும் 4 கோடியே 4 இலட்சத்து 63 ஆயிரம் பீப்பாய்களாகும். இந்நிலையில், தற்போதைய உற்பத்தி அளவைக் காட்டிலும், நாளொன்றின் எண்ணெய் உற்பத்தி அளவு 14 இலட்சம் பீப்பாயாக குறைக்கப்பட்டுள்ளது.