தைவான் நீரிணையில் மோதலை ஏற்படுத்துவதற்கான சீனாவின் எதிர்ப்பு
2023-06-05 18:49:40

அமெரிக்க ராணுவ கப்பல் தைவான் நீரிணையில் பயணம் மேற்கொண்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென் பின் கூறுகையில்,

அமெரிக்கா  முதலில் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு பிறகு, சீனா சட்டம் மற்றும் விதியின் படி, பதில் நடவடிக்கையை மேற்கொண்டது. சீன ராணுவப் படை மேற்கொண்ட நடவடிக்கை, குறிப்பிட்ட நாட்டின் ஆத்திரமூட்டும் செயலுக்கு எதிரான அவசிய நடவடிக்கையாகும். தைவான் நீரிணை பகுதியில் தொடர்புடைய நாடுகள், தொங்தரவுகளை ஏற்படுத்துவதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது. நாட்டின் இறையாண்மை பாதுகாப்பையும் பிரதேச அமைதியையும் சீனா உறுதியாக பேணிக்காக்கும் என்றார்.