தடுக்கப்பட்ட சிவில் விமானம்
2023-06-05 15:02:45

வட அமெரிக்க விமானப் பாதுகாப்புத் தலைமையகம், 4ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அத்தலைமையகத்தைச் சேர்ந்த  ஒரு எஃப் -16 போர் விமானம் அதே நாளில் வாஷிங்டன் வான்பரப்புக்குள் நுழைந்த ஒரு மென்ரக சிவில் விமானத்தை தடுத்து நிறுத்தியது. இச்சிவில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இது தொடர்பாக, அமெரிக்காவின் சிஎன்என் இணையம் வெளியிட்ட செய்தியின் படி, விழுந்த அந்த விமானம் நான்கு பேரை ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. அதோடு, தேடுதல் மற்றும் மீட்புப் படையினர் வீழ்ந்த விமானத்தின் உடைந்த பகுதிகளை இதுவரைக் கண்டுபிடிக்கவில்லை.

இச்சிவில் விமானம் டென்னசியில் இருந்து புறப்பட்டு நியூயார்க் மாநிலத்திற்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.