பிரிட்டன் மற்றும் போர்ச்சுக்கலில் புதிய சுற்று வேலை நிறுத்தம்
2023-06-05 14:18:34

வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போர்ச்சுக்கல் மற்றும் பிரிட்டனின் சில துறைகள் ஜூன் 5ஆம் நாள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.

அது போன்றே போர்ச்சுக்கலின் இருப்புப்பாதைப் பணியாளர்கள் 5ஆம் நாள் முதல் 30 நாட்கள் நீடிக்கும் புதிய சுற்று வேலை நிறுத்தத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும் அன்று, பிரிட்டனின் மிகப் பெரிய செவிலியர் சங்கமான ராயல் செவிலியர் கல்லூரியின் உறுப்பினர்களும் வேல்ஸில் புதிய சுற்று வேலை நிறுத்தம் நடத்தி ஊதியம் மற்றும் பணி நிலைமையை மேம்படுத்தக் கோரிக்கை விடுத்தனர்.