அமெரிக்க-பிரிட்டன்-ஆஸ்திரேலியா அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் வேண்டுகோள்
2023-06-06 17:27:39

கம்போடியத் தலைமையமைச்சர் சம்தேக் ஹன் சென் ஜுன் 5ஆம் நாள் கூறுகையில், அமெரிக்க-பிரிட்டன்-ஆஸ்திரேலியா அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, ஆபத்தான படைக்கலப்போட்டியின் துவக்கமாகும். இது தொடர்ச்சியாக நடத்தப்பட்டால், உலகம் மேலும் பெரும் நெருக்கடியில் சிக்கும் என்றார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ஹன் சென்னின் இக்கூற்று, ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பிரதேச நாடுகளின் பொது கவலையை வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் சர்வதேசச் சமூகத்தின் பொது அக்கறையைக் கருத்தில் கொண்டு, அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு போன்ற சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு அமைப்புமுறையைச் சீர்குலைக்கும் செயல்களை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.