முரண்பாட்டுடன் செயல்பட்ட அமெரிக்கா
2023-06-06 10:28:44

அண்மையில், சீனாவுடனான உறவில் அமெரிக்கா முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு புறம், 20வது ஷங்கரிலா பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பமைச்சர், தைவான் நீரிணை பிரச்சினை மற்றும் கூறப்படும் கப்பல் பயணச் சுதந்திரத்தைக் குறிப்பிட்டு, அமெரிக்க ராணுவக் கப்பல், சீனக் கப்பலால் ஆபத்தான முறையில் வழிமறிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். மறு புறம், சீனாவுடன் தொடர்பு கொள்ள, அதன் கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்தியத் தூதாண்மை விவகாரத்துக்கான துணை வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்கா, சீனாவை மிக பெரிய நெடுநோக்கு எதிராளியாக வைத்துள்ள பின்னணியில், சீனாவுடன் பிடிவாதமான முறையில் பழகுவது, சரியான அரசியல் தேர்வாகும் என்று வாஷிங்டன் கருதுகிறது. ஆனால், தற்போது அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதாரத்தில் நெருக்கடி தீவிரமாகி வருகிறது. கடன் நெருக்கடி கட்டுப்பாடு தவிர, காலநிலை மாற்றச் சமாளிப்பு, அணு ஆயுதப் பரவல், ரஷிய-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளில், சீனாவுடனான ஒத்துழைப்பை நாடுவது, அமெரிக்க உயர்நிலை அதிகாரிகளின் சீனப் பயண நோக்கமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, பல்வேறு நாடுகளுக்கிடையில் தூதாண்மையுறவின் அடிப்படை விதியாகும். தைவான் பிரச்சினையைத் தீர்ப்பதில், எந்த ஒரு வெளிப்புற சக்தியும் தலையிடுவதற்கு அனுமதிக்காது. சீனாவின் வான் மற்றும் கடல் பரப்பில், வெளிநாட்டு விமானம் மற்றும் கப்பல், ஐ.நா கடல் சட்டப் பொது ஒப்பந்தத்தைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும்.

சீனாவுடன் பழகும் போது, பரஸ்பர மதிப்பு, சமாதான சகவாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி ஆகியவற்றை, அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்.