சௌதி அரேபியாவிலுள்ள ஈரான் தூதரகம் மீண்டும் திறப்பு
2023-06-06 11:48:13

ஈரானுக்கும் சௌதி அரேபியாவுக்குமிடையிலான உடன்படிக்கையின்படி, சௌதி அரேபிய தலைநகர் ரியாத்திலுள்ள ஈரான் தூதரகம், ஜெட்டாவிலுள்ள துணை தூதரகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கான ஈரான் பிரதிநிதி அலுவலகம் ஆகியவை, ஜூன் 6ஆம் மற்றும் 7ஆம் நாளில் மீண்டும் திறக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கனணி தெரிவித்தார்.

இவ்வாண்டின் மார்ச் திங்கள், சீனா, சௌதி அரேபியா, ஈரான் ஆகிய மூன்று தரப்புகள், பெய்ஜிங்கில் கூட்டு அறிக்கையை வெளியிட்டன. சௌதி அரேபிய-ஈரான் தூதாண்மை உறவு மீண்டும் துவங்கும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.