ஆசியான் ஊடக கூட்டாளி மன்றக் கூட்டம்
2023-06-06 19:13:16சீன ஊடகக் குழுமம், சீன குவாங்சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் 2023 ஆசியான் ஊடக கூட்டாளி மன்றக் கூட்டம் ஜுன் 6ஆம் நாள் குவாங்சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நன்நீங்கில் நடைபெற்றது.

சீனா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேலான ஊடகத் துறையினர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் இக்கூட்டத்தில் பரிமாற்றம் மேற்கொண்டு, மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது சமூகத்தின் உருவாக்கத்துக்கு பங்காற்றினர். சீன பரப்புரை துறை துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் இதில் உரை நிகழ்த்தினார்.

சீன-ஆசியான் ஒத்துழைப்பை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உயர்வாகப் பாராட்டினார். மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது சமூகத்தின் கட்டுமானத்துக்கு எதிர்பார்ப்பு தெரிவித்தார். தற்போது உலகில் மிகப் பெரிய மிகவும் பரவலாக பரவியுள்ள சர்வதேச ஊடகமான சீன ஊடகக் குழுமம், கடந்த சில ஆண்டுகளில், ஆசியான் நாடுகளின் செய்தி ஊடகங்களுடன் நெருக்கமாக பரிமாற்றம் மேற்கொண்டு, ஒத்துழைப்பு சாதனைகளைப் பெற்றுள்ளது என்று ஷென் ஹெய்சியுங் தெரிவித்தார்.