மகளிருக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் எண்ணியல் பொருளாதாரம்
2023-06-06 19:19:07

2023ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு மகளிரின் தலைமைத்துவ மன்றக்கூட்டம், ஒன்றுக்கொன்று தொடர்பை வலுப்படுத்தி, பயன்தரும் ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது என்ற தலைப்பில் ஜுன் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு மகளிர்களின் வளர்ச்சி பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையின்படி, எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சியுடன், மகளிர் உலக வர்த்தகத்தில் பங்கெடுத்து, மேலதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மேலும், சீனாவின் எண்ணியல் பொருளாதார அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் 40 விழுக்காடு வகிக்கிறது. பிற நாடுகளில் இவ்விதிகம் சுமார் 20 விழுக்காடாகும். தற்போது, சீனாவின் எண்ணியல் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மகளிருக்கு 5 கோடியே 70 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.