இந்தியாவில் 1710கோடி ரூபாய் மதிப்பிலான பாலம் இடிந்து விழுந்த விபத்து
2023-06-06 17:02:56

பீகார் மாநிலத்தில் கங்கை கடந்த பெரிய பாலம் 4ஆம் நாள் இடிந்து விழுந்தது. இதுவரை இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

3160மீட்டர் நீளமான இப்பாலம் 1710கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. திட்டப்படி, நவம்பர் முதல் டிசம்பர் வரை காலத்தில் கட்டி முடிக்கப்படும். கடந்த ஆண்டு ஏப்ரலில் இப்பாலம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் மீண்டும் நிகழ்ந்துள்ளதால், கட்டுமானப் பொருட்களின் தரம் பற்றிய கவலை மக்களிடையே எழுந்துள்ளது.