பெய்ஜிங்கில் ஐசிஏஓ செயலாளருடன் சின் காங் சந்திப்பு
2023-06-06 19:19:21

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் காங் ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் சர்வதேச பயணியர் விமான அமைப்பின் செயலாளர் ஜுவான் கார்லோஸ் சலாசாருடன் சந்திப்பு நடத்தினார்.

பயணியர் விமானத் துறையில் அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ள சீனா, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் இத்துறையிலான சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றி, சர்வதேச பயணியர் விமானத் துறையின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்கினை ஆற்றி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவு போன்றவற்றில் சர்வதேச பயணியர் விமான அமைப்பு பங்கெடுக்க சீனா வரவேற்கிறது என்று சின் காங் தெரிவித்தார். மேலும், தைவான் பிரச்சினை சீனாவின் மைய நலனுடன் தொடர்புடைய முக்கிய ஒன்று. இப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் சர்வதேச பயணியர் விமான அமைப்பைச் சீனா பாராட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

உலக விமானத் துறையின் வளர்ச்சியில் சீனா ஆற்றியுள்ள தலைமை பங்கினையை சலாசார் வெகுவாகப் பாராட்டியதோடு, சீனாவின் சி919 விமானத்தின் வெற்றிகரமான வணிகப் பயன்பாட்டுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.