சேவைக்கு வரும் சீனாவின் பெரிய சொகுசுக் கப்பல்
2023-06-06 11:36:13

சீனா தானாகத் தயாரித்த முதலாவது பெரியளவிலான சொகுசுக் கப்பல் ஜுன் 6ஆம் நாள், காவ் ஜியோ கப்பல் கட்டும் தளத்தை விட்டு,  சோதனை கட்டத்தில் நுழைந்துள்ளது. இக்கப்பலின் முக்கியக் கட்டுமானப் பணி முடிவடைந்து, சோதனை மற்றும் உள்புற அலங்காரப் பணி தொடங்கியதை இது காட்டுகிறது.

24 மாடிகள் மற்றும் 2125 அறைகள் கொண்ட இச்சொகுசுக் கப்பலில் 5246 பேர் பயணிக்கலாம். துறைமுகத்தில் சோதனை பணி நிறைவடைந்த பின், இக்கப்பல் 2 முறை  வெள்ளோட்டம் மேற்கொள்ளும். அடுத்த ஆண்டில் அது அதிகாரப்பூர்வமாக சேவைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.