சீனாவின் வடபகுதியில் பாதுகாப்பு வனப் பகுதி
2023-06-06 20:21:36

சீனாவில் பெருமளவிலான பசுமைமயமாக்க நடவடிக்கை 2012முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை காடு வளர்ப்பு பரப்பளவு 6 கோடியே 80 லட்சம் ஹெக்டரை எட்டியுள்ளது. காட்டுப் பரப்பின் விகிதம் 24.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. செயற்கை காட்டுப் பரப்பு உலகின் முதலாவது இடத்தை வகிக்கிறது. குறிப்பாக சீனாவின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய 3 பகுதிகளிலுள்ள பாதுகாப்பு வனப் பகுதி திட்டப்பணி, உயிரினம், பொருளாதாரம் மற்றும் சமூகத் துறைகளில் பெரும் நலனைப் பெற்று, உலக உயிரினச் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முன்மாதிரியாக விளங்கியுள்ளது.