சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் நடத்திய செயற்குழுக் கூட்டம்
2023-06-06 10:41:19

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டம் 5ஆம் நாள் தொடங்கி 9ஆம் நாள் வரை நடைபெறுகின்றது.

நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை, திட்டம் மற்றும் வரவுச்செலவுக் குழு அறிக்கை, பாதுகாப்பு நடைமுறையாக்கம் பற்றிய அறிக்கை முதலியவை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் விவாதிக்க உள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு அவையின் 2231ஆவது தீர்மானத்தின் படி இக்கூட்டம் ஈரானின் அணு வசதிகளின் மீது கண்காணிப்புப் பணி மேற்கொள்ளும். மேலும், உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, ஜப்பானில் அணு கழிவு நீர் வெளியேற்றம் முதலிய பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.