2023 சீனப் பொருளாதார வளர்ச்சி 5.6விழுக்காடு:உலக வங்கி
2023-06-07 10:49:59

2023ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு 5.6விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  

இவ்வாண்டின் ஜனவரி வெளியிட்ட அறிக்கையில் கணக்கிடப்பட்ட 4.3விழுக்காடு மற்றும் ஏப்ரலில் கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்திய பொருளாதாரம் பற்றிய அரையாண்டு அறிக்கையில் கணக்கிடப்பட்ட 5.1விழுக்காடு ஆகியவற்றை விட, இது அதிகம்.

மேலும், இவ்வாண்டு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.1விழுக்காடாகவும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 0.4விழுக்காடாகவும் அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.