19வது பண்பாட்டுத் தொழில் பொருட்காட்சி ஷென்ஜனில் துவக்கம்
2023-06-07 14:53:05

19வது சீனச் சர்வதேசப் பண்பாட்டுத் தொழில் பொருட்காட்சி, ஜுன் 7ஆம் நாள் ஷென்ஜனில் துவங்கியது. அதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் நிறைந்வடைந்தன.

மொத்தம் 1.2 இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள இப்பொருட்காட்சியில் எண்ணியல் பண்பாட்டு அரங்கு, பண்பாட்டுத் தொழிலின் பன்நோக்க அரங்கு, குவாங்டுங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா அரங்கு உள்ளிட்ட 6 அரங்குகள் உள்ளன. இவற்றின் மூலம், சீனப் பண்பாட்டுத் தொழிலின் உயர்தர வளர்ச்சி சாதனைகள் வெளிக்காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.